யாழில் காதலை மறுத்ததால் கனடா சென்ற இளைஞனின் நிலை!

0
500

யாழில் கடந்த பல வருடங்களாகவே இங்குள்ள பெண்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தேடும் படலங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் உள்ளூரில் உள்ள இளைஞர்கள் பலர் திருமண வாழ்க்கை கைகூடாத நிலையில் ஏக்கத்துடன் காத்து நிற்கின்றனர். அதிலும் சில இளைஞர்கள் எப்படியாவது வெளிநாடுகளுக்கு சென்று ஓரிரு வருடங்கள் அங்கே கழித்து விட்டு வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற பெயருடன் நாட்டிற்கு வந்து திருமணம் முடித்து இங்கேயே இறுதி வரை தங்கி இருக்கின்ற சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது.

மறுபுறம் சில திருமண புரோக்கர்களால் உள்ளுர் மாப்பிள்ளைகளை பிடித்து அவர்களை வெளிநாட்டு மாப்பிள்ளைகள் போல் நாடகமாடி திருமணம் நடத்திய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

யாழில் காதலை மறுத்ததால் கனடா சென்ற இளைஞனின் நிலை! | Young Man Who Went To Canada Refused Love In Yali

இது இவ்வாறு இருக்க, யாழில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுவாரஸ்சிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் வடமராட்சி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தனது மைத்துனி மீது காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞனின் காதலை மைத்துனி ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதற்கு கூறப்பட்ட காரணம் இளைஞனிற்கு நிரந்தரமான வேலை இல்லையென்பதே.

இந்நிலையில் அவரது காதலை ஏற்கவில்லையென கூறப்படுகிறது. இதையடுத்து காதலியை திரும்பிப் பார்க்க வைப்பதற்காக குறித்த இளைஞன் ‘வெளிநாட்டு மாப்பிள்ளை’ ஆவதற்காக கனடா நாட்டிற்கு செல்லும் படகில் இளைஞனும் பயணித்துள்ளார்.

ஒக்ரோடபர் 8 ஆம் திகதி படகு பயணத்தை ஆரம்பித்ததும் குறித்த இளைஞன் வெளிநாட்டிற்கு செல்வதாக கப்பலில் பயணித்தவர்களின் குடும்பத்தினர் உறவுகளிற்கு இடையில் பரவியிருந்தது.

இந்த தகவலை அறிந்ததும் இளைஞனின் காதலியின் பெற்றோர் அடுத்தடுத்த நாளில் மோதகத்துடன் இளைஞனின் வீட்டிற்கு சம்பந்தக்கலப்பு செய்ய சென்றுள்ளார்கள்.

அதேவேளை 303 இலங்கையர்களுடன் கப்பல் மூழ்கிய தகவலை அறிந்த பின்னர் இளைஞனின் குடும்பத்தாரின் தொலைபேசி அழைப்புக்களிற்கே பதிலளிப்பதில்லையென குறிப்பிடப்படுகிறது.