தென்கொரியாவில் காணாமல் போன இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி..!

0
205

தென்கொரியாவுக்கு சென்றிருந்த இலங்கை மகளிர் ரக்பி அணியின் தலைவி துலானி பல்லேகொண்டகே இன்று (14) காணாமல் போயுள்ளதாக தகவல்க:ள் வெளியாகியுள்ளன.

ஆசிய எழுவர் கொண்ட ரக்பி போட்டியில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருந்த துலானி பல்லேகொண்டகே, நேற்று (13) இடம்பெற்ற போட்டியில் கலந்து கொண்ட பின்னர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தனது அணியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் கொரிய ரக்பி சங்க அதிகாரிகள் ஊடாக, இலங்கை ரக்பி அணியின் முகாமையாளர் அந்நாட்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

​​​​இதனையடுத்து, துலானி பல்லேகொண்டகே காணாமபோனமை குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

வெளிநாட்டில் மாயமான இலங்கை மகளிர் அணித் தலைவி! | Rugby Srilankan Team Leader Missing