கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த 3 வயது சிறுவன்; பதைபதைக்கும் சம்பவம்(Photos)

0
226

மாத்தளை- உக்குவளை லேலிஅம்ப பிரதேசத்தில் தாயும் பிள்ளைகள் மூவரும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுவனின் சகோதரர்கள் இருவரும் பாடசாலை செல்ல தயாராகிக்கொண்டிருந்த போது, அவர்களது வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் சிறுவர்களின் தாயையும் பிள்ளைகளையும் தாக்கியுள்ளார்.

சம்பவத்தின்போது அவர்களின் தந்தை தொழிலுக்குச் சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கைது

சம்பவத்தில் லேலிஅம்ப பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது தாயும் 19 வயது மகளும் மற்றுமொரு சிறுவனும் பாரிய காயங்களுடன் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் இடம்பெற்ற பதைபதைக்கும் சம்பவம்(Photos) | Shocking Incident In Sri Lanka

இந்நிலையில் சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்பவர் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.