ஜெயலலிதா சொல்லியும் கேட்காமல் தூக்கி எறிந்த நடிகர் செந்தில்… உண்மையை உடைத்த பயில்வான்…

0
123

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்கள் என்றால் அது கவுண்டமணி – செந்தில் காம்போ தான். கவுண்டமணிக்கு நிகராக கதைக்களத்துடனும் சீன்களுடனும் நடித்து வந்தார் செந்தில்.

தற்போது வயதான காரணத்தால் குணச்சித்திர ரோலில் நடித்தும் வருகிறார். நட்சத்திரங்களின் ரகசியம் குறித்து பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் மறைந்த அம்மையார் ஜெயலலிதா, செந்தில் பற்றி கூறியுள்ளார்.

அதில் பயில்வான் கூறியது,

செந்தில் ஒருமுறை ஜெயலலிதாவை பார்க்க சென்றுள்ளார். அப்போது செந்திலை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்துள்ளார். அதற்கு காரணம் செந்தில் மீது அதிக மரியாதையும் அவர் நடிப்பின் மீது ரசிகையாகவும் இருந்தவராம்.

அந்த சமயத்தில் தொகுதியில் பலர் நிற்க போட்டி போடும் சமயத்தில் செந்திலிடமே சென்று எந்த தொகுதி வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுள்ளாராம். ஆனால் செந்தில் உங்கள் அன்பு ஒன்றே போது தொகுதி எல்லாம் வேண்டாம் என்று செந்தில் கூறியிருக்கிறாராம்.

அப்படியொரு மரியாதை ஜெயலலிதா செந்திலிடம் வைத்திருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.