அலரி மாளிகையின் முன்றலில் நேற்று போராட்டம்..

0
381

கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையின் முன்றலில் நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டம் சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் கொள்ளுப்பிட்டி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் இரவு 7:30 மணியளவில் போராட்டம் ஆரம்பமாகியிருந்தது. இதன்போது, ​​அவ்விடத்திற்கு சைக்கிளில் வருகை தந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறியதையடுத்து, அடுத்த ஆர்ப்பாட்டமான முறை மாற்றம் (System Change) மற்றும் அரச அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த மக்களுக்கு பொலிசார் சந்தர்ப்பம் வழங்கவில்லை.

அலரிமாளிகைக்கு முன் திடீரென ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டகாரர்கள்! | Demonstrators Gathered Suddenly Before The Alarm

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் சிராந்த, “போராட்டத்திற்கு பொலிஸார் இடையூறு விளைவித்தமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தொடர்ந்தும் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உத்தேசித்துள்ளதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும், காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த கெடுபிடிகளுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.