டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டம் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நேற்று இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதல் பேட்டிங்கை ஆடிய இந்திய அணி கடுமையாக போராடி 169 ரன்களை இங்கிலாந்துக்கு நிர்ணயம் செய்தது. இதைதொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் முதலில் இறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் ஹேல்ஸ் இந்திய பவுலர்களின் பந்தை நான்கு புறங்களிலும் விளாசி வீசி அடித்தனர்.
விறுவிறுப்பாக செல்ல வேண்டிய போட்டியை இந்திய பவுலர்கள் 16 ஓவர்களிலேயே ரன்களை விட்டுக்கொடுத்து டஃப் கொடுக்கக்கூட தவறவிட்டனர்.
இதனால் இங்கிலாந்து அணி படுகேவலமாக 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோல்வியடையச் செய்தது.
இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளாத இந்திய ரசிகர்கள் இந்திய அணி வீரர்களை படுகேவலமாக விமர்சித்தும் கலாய்த்தும் வீடியோ மற்றும் புகைப்பட மீம்ஸ்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.