கனடா செல்ல ஆசைப்பட்டு வியட்நாமில் துணி துவைக்கும் இலங்கையர்கள்! (Photos)

0
530

கனடாவுக்கு சட்டவிரோத பயணம் மேற்கொண்ட நிலையில் நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கையர்களிற்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என வியட்நாம் ஊடகம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்டவர்கள் பதற்றமற்றவர்களாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றதாகவும், அவர்களிற்கான தங்குமிடம் உணவு போன்றவற்றை அரசாங்கம் மிகவும் கௌரவமான விதத்தில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடா செல்ல ஆசைப்பட்டு கடைசியில் வியட்நாமில் துணி துவைத்த இலங்கையர்கள்! (Photos) | Sri Lankans Refguees Washed Clothes In Vietnam

இன்று அதிகாலை சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் இலங்கையர்களை சென்று பார்த்ததுடன் அவர்களிற்கு உதவுவதற்கு வியட்நாம் அரசாங்கமும் அதிகாரிகளும் அனைத்தையும் செய்வார்கள் என உறுதியளித்தார்.

கனடா செல்ல ஆசைப்பட்டு கடைசியில் வியட்நாமில் துணி துவைத்த இலங்கையர்கள்! (Photos) | Sri Lankans Refguees Washed Clothes In Vietnam

இந்நிலையில் தாங்கள் அங்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ள இலங்கையர்கள் அரிசி மற்றும் பாண் ஆகிய உணவுகளை குறிப்பிட்டு அவை மிகவும் ருசியாக இருந்ததாகவும் கூறியதாக வியட்நாம் ஊடகம் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.