தமிழனின் உதவியை நாடிய எலன் மாஸ்க்!

0
462

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலன் மாஸ்க் (Elon Musk) டிவிட்டர் தளத்தை வாங்கியுள்ளார் .

இந்நிலையில் எலன் மாஸ்க் (Elon Musk) டிவிட்டரை வாங்கியவுடன் அதில் பல மாற்றங்களையும் செய்ய ஆரம்பித்துள்ள எலன் மாஸ்க் (Elon Musk), ஸ்ரீராம் கிருஷ்ணனின் உதவியை நாடியுள்ளார்.

சென்னை எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் B.Tech in Information Technologyஇல் பட்டம் பெற்ற இவர் 2005ம் ஆண்டு அமெரிக்காவிற்கு சென்று மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் பணியை ஆரம்பித்தார். மைக்ரோ சொப்ட்டின் “Windows Azure” மென்பொருள் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றி அனைவரும் அறியப்படும் நபராக மாறினார்.

தமிழனின் உதவியை நாடிய எலன் மாஸ்க்! | Elen Musk Sought The Help Of A Tamilian

தொழில்நுட்ப துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட ஸ்ரீராமிற்கு பெரிய நிறுவனங்களில் பல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது.

Twitter, Yahoo, Facebook and Snap என சமூக ஊடகங்களின் உயரிய பதவிகளை வகித்த இவர் பின்னாளில் “Andreessen Horowitz” எனும் தொழில்நுட்ப முதலீட்டு கம்பெனியின் பங்குதாரர் நிலைக்கு உயர்ந்தார்.

தமிழனின் உதவியை நாடிய எலன் மாஸ்க்! | Elen Musk Sought The Help Of A Tamilian

டிவிட்டர் தளத்தை எலன் மாஸ்க் (Elon Musk) வாங்கிய பின்னர் அதன் உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்தார். உத்தியோகபூர்வ டிவிட்டர் கணக்குகளுக்கு வழங்கப்படும் நீலநிற டிக் பெற்றுக்கொள்ள மாதத்தந்தம் 20டொலர் கட்டணம் வசூலிப்பு என அதிரடி மாற்றங்கள் செய்ய ஆரம்பித்துள்ளார்.

தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப டிவிட்டரை வடிவமைப்பதற்கு “ஸ்ரீராம் கிருஷ்ணன்” உதவியை எலன் நாடியிருந்த நிலையில் “எலன் மாஸ்க்குடன் (Elon Musk) இணைந்து பணியாற்ற “ஸ்ரீராம் கிருஷ்ணன்” ஒப்புக்கொண்டுள்ளதாக தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.