எலோன் மஸ்க் வாங்கிய சொகுசு விமானம்; எத்தனை கோடி தெரியுமா?

0
373

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்று அழைக்கப்படும் எலான் மஸ்க் (Elon Musk) தற்போது புதிதாக அதி சொகுசான நவீன விமானம் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஜி700 என்ற ஜெட் விமானத்தை வாங்க ஆர்டர் செய்துள்ளார். இந்த சொகுசு விமானம் ரூ.646 கோடி மதிப்புள்ளதாக கூறப்படுகின்றது.

எலான் மஸ்க் வாங்கிய அதிசொகுசு விமானம்; எத்தனை கோடி தெரியுமா? | Elon Musk Bought A Luxury Plane How Many Crores

இந்த விமானத்தை அமெரிக்க விமான உற்பத்தியாளரான கல்ப்ஸ்ட்ரிம் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நவீன விமானம் பல வசதிகளை கொண்டுள்ளது.

இதன்படி 57 அடி நீளமுள்ள இந்த விமானம் நவீன வசதிகளை கொண்டது. 7500 கடல் மைல்கள் தொடர்ந்து பறக்கக்கூடியது. இந்த விமானம் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின்களால் இயக்கப்படுகிறது.

எலான் மஸ்க் வாங்கிய அதிசொகுசு விமானம்; எத்தனை கோடி தெரியுமா? | Elon Musk Bought A Luxury Plane How Many Crores

விமானத்தில் வை-பை உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன. எரிபொருள் நிரப்பும் தேவையின்றி ஆஸ்டினில் இருந்து ஹாங்காங்குக்கு பறக்க முடியும் என்று கூறப்படுகின்றது.

மேலும் ஜி700 விமானம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் எலான் மஸ்க்கிடம் (Elon Musk) ஒப்படைக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு முதல் புதிய விமானத்தை இவர் பயன்படுத்த உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.