பிரித்தானியாவில் பலரையும் கவர்ந்த தேநீர்க் கடை!

0
514

பிரித்தானியாவில் தேநீர்க் கடை ஒன்று புதிய நடைமுறை ஒன்றை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

தங்கள் தேநீர்க்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பணிவன்புடன் நடந்துகொள்வதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பிரித்தானியாவில் உள்ள ஒரு தேநீர்க் கடை வித்தியாசமான வழியை நாடியிருக்கின்றது. தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பணிவன்புடன் நடந்துகொண்டால் தேநீரின் விலை சுமார் 1.90 பவுண்டிற்கு தேநீர் வழங்கப்படும்.

எனினும் மரியாதையின்றி நடந்துகொண்டால் சுமார் 5 பவுண்டிற்கு தேநீர் வழங்கப்படும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

கடையில் நல்ல சூழலை உருவாக்கவே அத்தகைய திட்டத்தைக் கொண்டு வந்ததாக அதன் உரிமையாளர் உஸ்மான் ஹுசேன் (Usman Hussain) செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

எனினும் இதுவரை எந்த வாடிக்கையாளரிடமும் இதுவரையில் தேநீரை 5 பவுண்டிற்கு விற்றதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடைமுறையை ஒரு ஓர் எச்சரிக்கைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வாடிக்கையாளர்கள் பணிவன்புடன் நடந்துகொள்ளவில்லை என்றால், அவர் வெவ்வேறு தேநீர் விலைகள் எழுதப்பட்டிருக்கும் பலகையைக் காட்டுவார்.

அதைப் பார்த்த பின்னர், வாடிக்கையாளர்கள் பணிவாக இருப்பதாக ஹுசேன் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் கடை நடத்தும் பகுதிகள் முழுவதில் இந்த நடைமுறை அமுலுக்கு வரவும் வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரவித்துள்ளார்.