எலோன் மஸ்க்கின் தொழில்நுட்ப ஆலோசகராக பணிபுரியும் தமிழர்!

0
152
  • டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க்கின் தொழிநுட்ப ஆலோசகராக தமிழரொருவர் செயற்பட்டு வருகிறார்.

எலான் மஸ்க்கின் தொழிநுட்ப ஆலோசகர்

இந்திய அமெரிக்கரும், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம கிருஷ்ணா இவ்வாறு தொழிநுட்ப ஆலோசகராக செயற்பட்டு வருகிறார் என தெரியவருகிறது. 

இந்த நிலையில் ஸ்ரீராம் கிருஷ்ணன், எலான் மஸ்கின் தலைமையில் டுவிட்டர் நிறுவனம் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க்கின் தொழிநுட்ப ஆலோசகராக செயற்படும் தமிழர் (Video) | Sriram Krishnan Advisor To Elon Musk Twitter

ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ் (ஏ16 இஸட்) என்ற நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் ஸ்ரீராம் கிருஷ்ணன், தற்காலிகமாகவே எலான் மஸ்குக்கு ஆலோசனை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளாா்.

ஏ16 இஸட் நிறுவனத்தின் முழுநேரப் பணியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியை தொடங்கிய ஸ்ரீராம் கிருஷ்ணன்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழிநுட்ப பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஸ்ரீராம் கிருஷ்ணன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினார்.

எலான் மஸ்க்கின் தொழிநுட்ப ஆலோசகராக செயற்படும் தமிழர் (Video) | Sriram Krishnan Advisor To Elon Musk Twitter

அதன்பிறகு பல்வேறு புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களின் ஆலோசகராக அவர் செயல்பட்டுள்ளார்.

வாடிக்கையாளா்களுக்குப் புதிய சேவைகளை வழங்கும் விவகாரம் தொடா்பான டுவிட்டர் குழுவின் ஆலோசகராகவும் ஸ்ரீராம் கிருஷ்ணன் ஏற்கனவே செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.