குறட்டையை அடிப்படையாகக் கொண்ட தமிழ்ப் படம்: நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகப் படம்!

0
643


தமிழ் திரைஉலகில் குறட்டையை மையமாக வைத்து ஒரு காமெடி படம் உருவாகியுள்ளது

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய்பீம் ஆகிய பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் முதல் முதலாக கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ஒன்று உருவாகி உள்ளது

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த திரைப்படத்தை விநாயகர் சந்திரசேகரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஷான் ரோல்டான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர்

இந்த படத்தில் மணிகண்டனுடன் முக்கிய கேரக்டர்களில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குனர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இயக்குநர் எஸ்பி சக்திவேல் பணிபுரிந்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஜெயந்த சேதுமாதவன் ஒளிப்பதிவும், பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணியையும் கலை இயக்கத்தை ஸ்ரீகாந்த் ஆகியோர் மேற்கொள்கின்றனர்

இன்று பெரும்பாலும் அவதிப்படும் குறட்டை பிரச்சினையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இணைந்த ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படத்தை படக்குழு உருவாக்கியுள்ளனர். சென்னையை சுற்றி ஒரே கட்டமாக படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.