இந்த மாதம் பல ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வரப் போகிறது. பல ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் ஏற்படும்.
கடக ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் அதிக பண ஆதாயத்தைக் காண்பார்கள். மேலும் ரிஷபம் ராசிக்காரர்கள் களத்தில் நல்ல வாய்ப்புகளைப் பார்ப்பார்கள்.
இந்த பதிவில் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் பொருளாதார ரீதியாக இந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷத்தில் ராகு, மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, சூரியன், சுக்கிரன், புதன், மகரத்தில் சந்திரன், சனி, மீனத்தில் குரு என கிரக நிலைகள் அமைந்துள்ளன.
நவம்பரில் இந்த கிரக நிலை அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்கும் தொழில் மற்றும் நிதி நிலை அடிப்படையில் நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இருக்கப் போகிறீர்கள் என்பதைப் பார்ப்போம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பானதாக இருக்கும். பணியிடத்தில் நிதனமாக முடிவெடுப்பது நல்லது. உங்களின் நிதி நிலைமை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வருவாய் உயர்வதற்கான பல வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
இந்த வாரம் உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். காதல் உறவில் கவனம் தேவை. தேவையற்ற பிரச்சினைகளில் சிக்க நேரிடும், தவறான புரிதல்கள் அதிகரிக்கக்கூடும். இந்த மாதம் பயணங்களை ஒத்திவைப்பது நல்லது. இல்லையெனில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.

ரிஷபம்: ரிஷப ராசிக்கு இந்த மாதம் தங்கள் வேலைகளில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். உங்களுக்கு நிறைய சுப நிகழ்வுகள் நடக்கும்.
நவம்பரில் மேற்கொள்ளும் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். நிதி விஷயங்களில் பண ஆதாயம் ஏற்படும் சூழ்நிலை இருக்கும் மற்றும் அதிக கவனத்துடன் முடிவுகளை எடுப்பதால், அதிக பண வருவாய் கிடைக்கும். காதல் உறவுகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் இருக்கும். உங்கள் குடும்பத்தின் அழகான எதிர்காலத்திற்காக நீங்கள் சில உறுதியான முடிவுகளை எடுக்கலாம். இருப்பினும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

மிதுனம்: மிதுனம் ராசிக்காரர்கள் இந்த மாதம் அதிக பயணத்தை மேற்கொள்ள நேரிடும். அதன் மூலம் சுப பலன்களைப் பெறுவார்கள். மேலும், பயணங்களின் போது நீங்கள் நிறைய ஓய்வை உணரலாம். நிதி விஷயங்களில் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த மாதம் பணியிடத்தில் சில பிரச்சனைகள் அதிகரிக்கலாம். நவம்பர் மாத இறுதியில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். காதல் உறவில் ரொமாண்டிக்கான நேரமாக இருக்கும்.
மேலும் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழல் நிலவும், மகிழ்ச்சி நிலவும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு பொருளாதாரப் பார்வையில் நவம்பர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மாதம் நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிதி விஷயங்களில் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கும். பணியிடத்தில் சில பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
பணியிடத்தில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும். அதே போல சில புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நவம்பர் மாத இறுதியில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழல் நிலவும், மகிழ்ச்சி நிலவும். இருப்பினும், மாத இறுதியில், யாரோ உங்களை ஏமாற்றுவது போன்ற உணர்வு ஏற்படும்.

சிம்மம்: சிம்மம் ராசிக்காரர்கள் முதலீடு செய்வதில் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் பல வழிகளிலிருந்து பண ஆதாயத்தையும் பெறலாம். காதல் உறவில், உங்கள் விருப்பப்படி சூழ்நிலைகளை கட்டுப்படுத்த முடியும், மேலும் பரஸ்பர அன்பும் வலுவடையும். பணியிடத்தில் மனம் உணர்ச்சிவசப்பட்டு சில இழப்புகளையும் சந்திக்க நேரிடும்.
உணர்ச்சிகளையும், கோபத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் சக ஊழியர்களின் அன்பையும், ஆதரவையும் பெறலாம். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் பரஸ்பர அன்பும் வலுவாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். இந்த மாதம் பயணத்தை தள்ளிப்போடுவது நல்லது.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதம் தங்கள் திட்டங்களில் முன்னேற்றம் கண்டு திருப்தி அடைவார்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான சுப வாய்ப்புகளும் இந்த மாதம் காணப்படும் மற்றும் பண ஆதாயங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் தெரியும். ’
இந்த மாதத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும் பயணத்தின் போது கொஞ்சம் நிதானமும், கவனமாகவும் இருப்பது நல்லது. காதல் உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நவம்பர் இறுதியில் பணிச்சுமை உங்களுக்கு அதிகமாக இருக்கும்.

துலாம்: நவம்பர் மாதத்தில் துலாம் ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். இந்த மாதத்திலிருந்து ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் தெரியும். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியம் குறித்தும் நீங்கள் மிகவும் கவனமாக இருப்பீர்கள்.
காதல் உறவில், பரஸ்பர அன்பு வலுவாக இருக்கும் மற்றும் சூழ்நிலைகள் உங்கள் மனதிற்கு ஏற்ப இருக்கும். பணியிடத்தில் ஈகோ மோதல்களைத் தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள்.
குடும்பத்தில் அன்புக்குரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். இந்த வாரம் இந்த வேறுபாடுகளைப் புறக்கணிப்பது உங்களுக்கு நல்லது. மாத இறுதியில், உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு இந்த மாதம் மிகவும் சாதகமானதாக இருக்கும். நிதி நிலை சிறக்கும். பணியிடத்தில் வலுவான ஆளுமை கொண்ட ஒருவரிடமிருந்து நீங்கள் உதவி பெறலாம்.
பணியிடத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். காதல் உறவில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
இருப்பினும், நீங்கள் குடும்ப விஷயங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுவீர்கள், அமைதியற்றதாக உணருவீர்கள். இந்த மாதம் பயணத்தை தள்ளிப்போடுவது நல்லது. நவம்பர் மாத இறுதியில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

தனுஷ்: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் ஏற்படும். இதுமட்டுமின்றி, இந்த மாதம் உங்கள் திட்டத்தை வெற்றிகரமாகச் செய்ய யாராவது உங்களுக்கு உதவ முன்வருவார்கள்.
நிதி விஷயங்களில், பண ஆதாயங்களின் வலுவான நிலை உணர்வீர்கள். மேலும் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடும் மனநிலையில் இருப்பீர்கள். காதல் உறவில் ரொமான்டிக் ஆக இருக்கும்.
இந்த மாதம் பயணங்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்ப விஷயங்களில் சில தொந்தரவுகளால் விரக்தி மன நிலை ஏற்படும்.
இந்த மாதம் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும். நவம்பர் மாத இறுதியில், உங்கள் ஞானத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறுவீர்கள்.

மகரம்: மகர ராசிக்காரர்கள் இந்த மாதம் நீங்கள் பணியாற்றும் துறையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நிதானத்துடன் செயல்பட்டால் எதிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் உங்கள் சாதுரியத்தின் மூல, பலரின் ஆதரவு கிடைக்கும். காதல் உறவில் மனக் கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. இந்த மாதம் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் கவனமாக நிதி நிலைமையை சமாளிக்கவும். குழந்தைகள் தொடர்பான செலவுகளும் அதிகமாக இருக்கும். குடும்பத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவீர்கள். இந்த மாதம் பயணத்தை தள்ளிப்போடுவது நல்லது.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் இந்த மாதம் நீங்கள் பணியாற்றும் துறையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். இந்த மாதம் உங்கள் தொழிலுக்கு ஏற்ற மாதம். நவம்பர் தொடக்கத்தில், உங்களின் வேலை, தொழில் தொடர்பான திட்டங்கள் மூலம் நல்ல பலனைப் பெற்றிட முடியும். காதல் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
அதே சமயம் அதிக செலவும் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்நிலையிலும் படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசியுடன் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.
இந்த மாதத்தில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் நல்ல அனுகூலத்தைத் தரும். உங்கள் பயணங்களில் அதிக கவனம் செலுத்தினால், அதிக மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும்.

மீனம்: வேலையைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில், வேலை போன்ற பணித்துறையில் முன்னேற்றம் இருக்கும் மற்றும் உங்கள் விருப்பப்படி இடமாற்றங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த மாதம் செலவுகளின் கவனம் செலுத்துவது நல்லது. சரியாக திட்டமிடாவிட்டால் செலவுகள் கட்டுப்படுத்துவது கடினம். வயதானவர்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கலாம்.
ஆரோக்கியத்தில் நிறைய முன்னேற்றம் இருக்கும், குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம் அல்லது பூர்விக சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் மனக் கவலை ஏற்படலாம். இந்த மாதம் பயணத்தை தள்ளிப்போடுவது நல்லது.