ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது!

0
106

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டி இடம் பெற்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்ப்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி | Sri Lanka Won By Defeating Afghanistan

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும் லஹிரு குமார 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 145 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் தனஞ்சய த சில்வா ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் முஜீபுர் ரஹ்மான் மற்றும் ராசித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளு.