உன்னை மறக்க முடியல; அசல் கோளாறை நினைத்து உருகும் பிக்பாஸ் நிவாஷினி

0
662

அசல் கோளாறு பிரிவைத் தாங்க முடியாமல் பிக்பாஸ் வீட்டில் தனிமையில் கண்கலங்கி நிவாஷினி அழுது புலம்பி வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். யாரும் எதிர்பார்க்காத விதமாக முதலில் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறிய அசல் கோளாறு –

பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்களிடம் அசல் கொஞ்சம் அத்துமீறி வந்தார். பெண் போட்டியாளர்களான குயின்ஸி, மகேஸ்வரி, மைனா, ஜனனி இவர்களிடம் அசல் செய்த செயல் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்தது. அடுத்தடுத்து இவரின் வீடியோ வெளியானதால், இதைப் பார்த்த நெட்டிசன்கள் கமல் சார்… உடனே அசலை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று கூறி கமெண்ட் செய்து வந்தனர். 

நான் என்ன பண்ணேன்…

சென்ற வாரம் வீட்டை விட்டு யார் வெளியேறுவார்கள் என்று கமல் கேட்ட கேள்விக்கு, அசல், நான் என்ன பண்ணிட்டேனு என்னை இந்த இடத்துல உட்கார வச்சிருக்காங்கனு முழிச்சுக்கிட்டு இருக்கேன் சார் என்று கூறிய அவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அசல் கோளாறு நினைத்து உருகும் நிவாஷினி

இந்நிலையில், அசல் வீட்டை விட்டு வெளியேறிய நாளிலிருந்து நிவாஷினி அழுது கொண்டே இருக்கிறார். அசல், உன்னை மறக்க முடியல என்று தனிமையில் நிவாஷினி புலம்பி வருகிறார்.

ஏன்டா போன.. நீ இல்லாமல் என்னல…, நீ இல்லாமல் என்னல சாப்பிட முடியல.. தூங்க முடியலடா, மறக்க முடியல… இந்த 21 நாள்ல நான் காலையில் எழுந்ததும் உன் முகத்தைதான் பார்ப்பேன் என்று கேமராவைப் பார்த்த படி பேசி புலம்பி வருத்தப்பட்டு வருகிறார். மேலும், உன் சட்டையை நான் எடுத்து வச்சிக்கிட்டேன், அதைத்தான் போட்டு இருக்கிறேன். வெளியில் வந்ததும், உன்னைப்பார்த்து இந்த சட்டையை வாஷ் பண்ணி தருவேன் என்று குழந்தைப் போல அசலை நினைத்து நிவாஷினி உருகி அழுதுள்ளார்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்

தற்போது இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவைலத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், அசல் கோளாறு இல்லாததால் நிவாஷினிக்கு சோறு, தண்ணி இறங்கவில்லையாம். அதனால் இந்த வாரம் நிவாஷினி வெளியேற்றி அசலுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

https://www.taatastransport.com/