கூகுளில் தேடக்கூடாதவை! வரம்பு மீறுபவர்களுக்கான தண்டனை தெரியுமா?

0
584

இன்றைய காலக்கட்டத்தில், நம்மில் பெரும்பாலானோர், நமக்குள் எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஆன விடையை கூகுளில் தேடுகிறோம்.

அன்றாட செய்திகள், நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் என அனைத்தையும் வழங்கும் தகவல் களஞ்சியமாக இருக்கும் கூகுள், நமக்கு தகவல்களை அள்ளித் தரும் தளமாக இருக்கிறது.

கூகுள் நிறுவனத்திடம் எந்த கேள்வி கேட்டாலும், அது உடனடியாக பதிலளிக்கும். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காவும், குற்றங்களை தடுக்கும் நோக்கத்திற்காகவும், தொழில்நுட்ப விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கூகுளில் நீங்கள் நினைப்பதை எல்லாம தேட முடியாது. எல்லா கேள்வியையும் உங்களால் கேட்க முடியாது. கூகுளில் சில கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிவது உங்களை சிக்கலில் தள்ளலாம்.

கூகுளில் எந்த விஷயங்களை தேடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் அறிந்து கொள்ளலாம். கூகுள் தேடல்களில் பல விஷயங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கலாம். Google இல் ஏதேனும் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தைத் தேடும்போது, உங்கள் IP முகவரி நேரடியாகப் பாதுகாப்பு நிறுவனங்களைச் சென்றடையும்.

கூகுள் தேடலில் நீங்கள் செய்த ஒரு தவறு உங்களைச் சிறையில் தள்ளும். இதனால் கூகுள் தேடலில், நீங்கள் தேடக் கூடாத சில விஷயங்கள், இதற்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கும் முறை:

வெடிகுண்டுகள் அல்லது துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கும் முறையைப் பற்றிய தகவல்களை நீங்கள் கண்டுபிடிக்க முயற்சித்தால், நீங்கள் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும், ஏனென்றால் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் பற்றிய தகவல்களைப் பெறுவது போன்ற தேடல்களை இந்திய அரசாங்கம் கண்காணித்து வருகிறது.

நாட்டின் பாதுகாப்பை மனதில் வைத்து, அரசு இதை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.

குழந்தைகள் தொடர்பான குற்றங்கள்

கூகுள் தேடலில் குழந்தை குற்றங்கள் தொடர்பான எந்த தகவலையும் பெற விரும்பினால் சிக்கலை சந்திக்க நேரிடும். ஏனெனில் குழந்தை குற்றங்களுக்கு மிகவும் கடுமையான விதிகள் உள்ளன, மேலும் இது தொடர்பான தகவல்களை பெற விரும்பினால், நீங்கள் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். 

வீடியோ பைரஸி

கூகுளில் தேடக்கூடாத விஷயங்கள்! மீறி தேடுபவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? | Things Not To Search On Google For Seekers Jail

ஒரு புதிய திரைப்படம் அல்லது பாடல் இணைப்பைத் தேடுகிறீர்களானால், அதனாலும் சிக்கல் ஏற்படலாம். இது புதிய படங்கள் தொடர்பான வீடியோக்களை முதலியவற்றைச் சட்டத்திற்கு மாறாக பிரதி எடுக்கும் குற்றச் செயலின் கீழ் வருவதால், நீங்கள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில் இதுபோன்ற தலைப்புகளில் தேடுவதைத் தவிர்க்கவும்.

ஹேக்கிங்

பெரும்பாலானோர் ஆர்வம் காரணமாக ஹேக்கிங் பற்றி அறிய விரும்புகிறார்கள், அவர்கள் கூகிள் தேடலில் ஹேக்கிங் தொடர்பான தகவல்களைப் பெற முயற்சித்தால் அரசாங்கத்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹேக்கிங் போன்ற முக்கியமான தலைப்புகளில் தகவல்களைப் பெற முயற்சிக்காமல் இருப்பது நல்லது.