சுவிட்சர்லாந்து-பாஸல் பகுதியில் உள்ள லாரச் என்ற இடத்தில் உள்ள தொடர்மாடி கட்டிடத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது தாயை 34 வயதுடைய ஆண் ஒருவர் கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி கொலையாளி பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுளளார். கடந்த வியாழன் தாயை கொன்றதாக இன்று திங்கள் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
அவர்களுக்கு இடையே ஆன விவாதத்துக்கான காரணம் தெளிவாக தெரியவரவில்லை.

கொலைக்கு பின்னர் தப்பியோடிய நபர் பின்னர் தாமாகவே பொலிஸிடம் சரண் அடைந்ததாக தெரிவிக்கின்றனர்.
மேலும் விசாரணை தொடர்வதாக பொலிஸ் தெரிவிக்கின்றது.