வீட்டுக்கு வேலைக்கு வந்த பெண்ணை மயக்கிய இயக்குனர்… நடிகை அவதாரம் எடுத்த சில்க் ஸ்மிதா!

0
426

இந்திய திரையுலகில் ஸ்ரீதேவிக்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை சில்க் ஸ்மிதா. 80 மற்றும் 90களில் சபதம் முடிப்பேன் என்ற படத்தில் அறிமுகமானார்.

இதையடுத்து கவர்ச்சி கன்னியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிப்படங்களில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார் சில்க் ஸ்மிதா. 17 வயதில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்த சில்க் ஸ்மிதா மன உளைச்சல் காரணமாக 1996ல் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார்.

சில்க் ஸ்மிதாவை சினிமாவில் அறிமுகப்படுத்த பல காரணங்கள் அமைந்தது. அதில் ஒன்று தான் இயக்குனர் வினுசக்கரவர்த்தி அறிமுகப்படுத்தியது தான். வண்டிச்சக்கரம் என்ற படத்தின் போது ஒரு கிளாமர் பாடலுக்கு நடனமாட நடிகை தேவைப்பட்டிருக்கிறார்.

அதற்காக முன்னணி நடிகைகளை ஓகே செய்யலாம் என்று தயாரிப்பாளர் கூற, வேண்டாம் புதுமுகம் தான் வேண்டும் என்று கூறியிருக்கிறார் வினுசக்கரவர்த்தி. அப்படி தேடும் போது தான் வீட்டில் வேலை செய்த பெண்ணை பார்த்திருக்கிறார்.

அந்த பெண்ணின் கண்ணில் ஒரு காந்தம் இருந்ததால் நடிக்க விருப்பமா என்று கேட்டுள்ளார். அப்படி விஜயலட்சுமி என்ற ஒரு மாவு அரைத்துக்கொண்டிருந்த பெண்ணை சில்க் ஸ்மிதாவாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் வினுசக்கரவர்த்தி.