நாளைய சூரிய கிரகணம்; யாழ், கொழும்பு மக்களுக்கு பார்வையிடும் வாய்ப்பு!

0
318

இலங்கையில் நாளையதினம் பகுதியளவு சூரிய கிரகணத்தை காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் நட்சத்திரம் மற்றும் வானியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

25ஆம் திகதியான நாளை பிற்பகல் நேரங்களில் சில பிரதேசங்களில் பகுதியளவான சூரிய கிரகணம் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூரிய கிரகணம்

மாலை 5.27 மணி முதல் யாழ்ப்பாணத்தில் 22 நிமிடங்களுக்கும், கொழும்பில் 5.43 மணி முதல் 9 நிமிடங்களுக்கும் பகுதியளவு சூரிய கிரகணம் தெரியும் எனவும், ஆனால் நாட்டின் தென்பகுதிகளில் சூரிய கிரகணம் தென்படாது எனவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சூரிய ஒளி மிகவும் குறைவாக இருக்கும் போது ஏற்படும் பகுதியளவு சூரிய கிரகணத்தால், அதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

நாளை வானில் ஏற்படவுள்ள மாற்றம் - யாழ், கொழும்பு மக்களுக்கு பார்வையிடும் வாய்ப்பு | Last Solar Eclipse Of 2022

இன்னும் 5 வருடங்களின் பின்னரே இனி இலங்கையில் மீண்டும் சூரிய கிரகணம் ஒன்று தோன்றும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.