யுத்த காலத்தில் கூட மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இருந்ததில்லை:கடற்தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

0
440

தடையில்லாமல் மண்ணெண்ணெயை வழங்குமாறு கோரி காக்கைதீவு துறைமுகத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் காக்கைதீவு மற்றும் சாவல்கட்டு கடற்தொழிலாளர்கள் நேற்று(23.10.2022) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

யுத்தம் நடந்த காலப்பகுதி

போராட்டத்தில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் யுத்தம் நடந்த காலப்பகுதியில் கூட மண்ணெண்ணெய்க்கு இவ்வாறான தட்டுப்பாடு நிலவவில்லை.

அந்த காலப்பகுதியிலும் நாங்கள் மிக இலகுவாக மண்ணெண்ணெய் பெற்றுக்கொண்டோம். காக்கைதீவு துறைமுகத்தில் 225 படகுகள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

தற்போது ஒரு படகுக்கு வாரம் ஒன்றிற்கு 30 லீட்டர் மண்ணெண்ணெயே வழங்கப்படுகிறது. எமக்கு ஒருநாள் பாவனைக்கே 50 லீட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்த 30 லீட்டர் மண்ணெண்ணெய் ஒரு வாரத்திற்கு எவ்விதம் போதும்?