பரிதாபமாக உயிரிழந்த 12 வயது சிறுவன்; பிரித்தானியாவில் சோகம்!

0
475

பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதியில் கேரேஜில் இருந்து மதில் சரிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் பரிதாமாக உயிரிழந்துள்ளார்.

இந்த துயர சம்பவம் கிளாக்டன் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதில் 12 வயதேயான Scott-Swaley Daniel Stevens என்ற சிறுவன் உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.

இந்த விபத்தில் சிறுவனின் தந்தையும் படுகாயமடைந்திருந்தும், மகனை காப்பாற்றும் நோக்கில் எடுத்த முயற்சிகள் வீணானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறிது நேரத்திலேயே சிறுவன் மரணமடைந்துள்ளார்.

தீயணைப்பு வீரர்களும், புறநகர் மீட்புக்குழுவும் உதவிக்கு முன்வந்துள்ளனர். பொலிசார் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம் | Incident That Caused Great Distress In Britain

இந்த நிலையில், சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் துயரத்தை வெளிப்படுத்தியுள்ள குடும்பம், தாங்கள் அனுபவிக்கும் வலியின் ஆழத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை எனவும், மொத்த குடும்பமும் நொறுங்கிப் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம் | Incident That Caused Great Distress In Britain

இதனிடையே, சுவர் இடிந்து விழுந்ததன் காரணம் தொடர்பில் விசாரிக்கப்படும் எனவும், பாதுகாப்பு தொடர்பிலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் என பொலிசார் கூறியுள்ளனர்.