வாக்கெடுப்பு புறக்கணிப்பு; புடினை மகிழ்வித்த இலங்கை!

0
401

உக்ரைனில் புகுந்து கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷியப் படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

வாக்கெடுப்பு புறக்கணிப்பு; புடினை மகிழ்ச்சிப்படுத்திய இலங்கை! | Sri Lanka Made Putin Happy

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) கண்டனம் தெரிவித்திருந்தார்.

ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

இந்நிலையில் ஐ.நா.பொதுச் சபையில் நேற்று ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. எனினும் இந்த வாக்கெடுப்பில் இலங்கை உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

வாக்கெடுப்பு புறக்கணிப்பு; புடினை மகிழ்ச்சிப்படுத்திய இலங்கை! | Sri Lanka Made Putin Happy