உணவு நேரம் திடீரென்று சுருண்டு விழுந்த மாணவர்கள்!

0
418

மெக்சிகோ நாட்டில் பள்ளி ஒன்றில் உணவு நேரம் திடீரென்று மாணவர்கள் ஈக்கள் போல் சுருண்டு விழுந்த சம்பவத்தால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

சுமார் 12 முதல் 15 வயதுடைய மாணவர்கள் சாப்பிட்ட உணவு காரணமாகவே சுருண்டு விழுந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் சாப்பிட்ட உணவில் கோகோயின் மற்றும் மெத்தாம்பேட்டமைன் கலந்திருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

குறைந்தது 100 மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டு சம்பவயிடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளனர். தகவல் அறிந்த பெற்றோர்கள் உடனடியாக Juana de Asbaje பள்ளிக்கு விரைந்துள்ளனர்.

பெரும்பாலான மாணவர்கள் கோமா நிலையில் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு குழந்தை தீவிர நிலையில் மீட்கப்பட, அவரை அருகாமையில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே, பள்ளி வளாகத்திற்குள் போதைப்பொருள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக மாநில அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

உணவு நேரம் ஈக்கள் போல் சுருண்டு விழுந்த பள்ளி குழந்தைகள்: வெளிவரும் பகீர் சம்பவம் | Poisoned With Food School Kids Drop Like Flies

ஆனால் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் இது தொடர்பில் இதுவரை முழுமையான தகவலை வெளியிட மறுப்பதாக கூறப்படுகிறது. மேலும், வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் மாணவர்கள் சிலர் போதை மருந்து கலந்த குடிநீரை பருகியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.