காணாமல் போன 04 வயது குழந்தை உரை பையில் இருந்து மீட்பு!

0
332

ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் 04 வயது குழந்தை வீடொன்றிலிருந்து காணாமல் போயுள்ளது.

அத்தோடு காணாமல் போன குழந்தை உரை பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையின் வீட்டில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் உள்ள முட்புதரில் குழந்தை சுற்றப்பட்டிருந்த உரப்பை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன குழந்தை உரை பையில் இருந்து மீட்பு:குற்றத்திற்கான காரணம் | Rescue From Missing Child Text Bag

ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அக் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்

இது தொடர்பில் பெற்றோருக்கு கிடைத்த முறைபாட்டின் படி விசாரணை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையை கடத்தியமைக்கான காரணம் அறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.