பிக் பாஸ் போட்டியாளராக பிரபலமான டிக்டாக் இலங்கை பெண்!

0
20357

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில் வரும் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இதன் 6வது சீசன் ஆரம்பமாக உள்ளது.

நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும், இந்தாண்டு 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதால் பிக்பாஸ் வீட்டுக்குள் கலகலப்புக்கும் சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளாராக இலங்கை பெண் டிக்டாக் பிரபலம்! யார் அவர்? | Sri Lanka Tik Tok Popular Contestant Bigg Boss 6

மேலும் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போதே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்திலும் 24 மணி நேரமும் நிகழ்ச்சியைப் பார்க்க வழி செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சினிமா, சின்னத்திரைப் பிரபலங்களுடன் இந்த முறை பொது மக்களிலிருந்தும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த பட்டியலில் இருக்கும் சிலரைப் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய பிக்பாஸ் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு நேற்று முன்தினம் முதல் க்வாரன்டீன் தொடங்கியது. பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சினிமா, சின்னத்திரைப் பிரபலங்களுடன் இந்த முறை பொது மக்களிலிருந்தும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாமெனத் அறிவக்கப்ட்டிருந்தது.

எனவே ஆயிரக்கணக்கானோர் ‘ஏன் பிக் பாஸில் கலந்துகொள்ள நினைக்கிறோம்’ என்பதை விளக்கி வீடியோ எடுத்து சேனலுக்கு அனுப்பி வைத்தார்களாம். அவற்றைப் பரிசீலித்து அவர்களிலிருந்தும் சிலர் தேர்வாகி உள்ளார்களாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளாராக இலங்கை பெண் டிக்டாக் பிரபலம்! யார் அவர்? | Sri Lanka Tik Tok Popular Contestant Bigg Boss 6

அந்தப் பட்டியலில் இருக்கும் சிலர் குறித்தும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தற்போது மேலும் மூன்று பேர் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.

அவர்கள் யார் எனப் பார்க்கலாமா? சென்னையைச் சேர்ந்த இவர் ஒரு சூப்பர் மாடல் என்கிறார்கள்.

பார்ப்பதற்கு யாஷிகா ஆனந்த் சாயலில் இருக்கும் இவர் சினிமாவுக்கு முயற்சி செய்து வருகிறாராம். இலங்கையில் இருந்து டிக் டாக் பிரபலம் ஜனனி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.