யாழில் 13 சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய 73 வயது முதியவர்!

0
708

யாழில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில், இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 13 சிறுமிக்கு 73 வயது முதியவரால் நேர்ந்த கொடூர சம்பவம்! | 73 Year Old Man Sexually Abused A 13 Year Old Girl

13 வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் 13 சிறுமிக்கு 73 வயது முதியவரால் நேர்ந்த கொடூர சம்பவம்! | 73 Year Old Man Sexually Abused A 13 Year Old Girl

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் வயோதிபரை கைது செய்தனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்கு முற்படுத்தியுள்ளனர். விசாரணைகளின் பின்னர் வயோதிபர் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.