பேஸ்புக் காதல்; இலங்கையில் 60 வயது காதலியின் மீது கத்திகுத்து!

0
326

பேஸ்புக் ஊடாக பழகிய 60 வயதான காதலியை கத்தியால் குத்திவிட்டு தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட 49 வயது காதலனை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலி மீகொட கல்கந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் காதலன் சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது. இருவரும் பேஸ்புக் மூலம் பழகி காதல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ள நிலையில் இருவருக்கும் திருமணமாகி பிள்ளைகளும் உள்ளனர்.

முகநூல் காதல் ; இலங்கையில் 60 வயது காதலி மீது சரமாரி கத்திக்குத்து | Facebook Love Gossip

தனிமையில் வசித்த பெண்

60 வயதான காதலியின் மகள்மார் தந்தையுடன் வாழ்ந்து வருவதாகவும் காதலி தனியாக வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பேஸ்புக் காதலன் காதலியை சந்திக்க மீகொடவுக்கு வருகை தருவதாகவும் ஓரிரு இரவுகள் தங்கிச் செல்வதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

முகநூல் காதல் ; இலங்கையில் 60 வயது காதலி மீது சரமாரி கத்திக்குத்து | Facebook Love Gossip

இவ்வாறு ஒரு நாள் வந்து காதலியின் வீட்டில் தங்கியிருந்தபோது இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து கட்டிலில் வைத்து காதலியை கத்தியால் குத்திவிட்டு காதலன் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமுற்ற காதலி ஹோமாகம வைத்தியசாலையில் அமுனதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.