உக்ரைனிய  பாடலை பாடி­யதால் கிரிமியா அழ­கு­ராணிக்கு அபராதம்!

0
345

யுக்­ரை­னிய தேசா­பி­மான பாடலைப் பாடி­ய­மைக்­காக கிரை­மிய அழ­கு­ராணி ஒரு­வ­ருக்கு ரஷ்ய சார்பு அதி­கா­ரிகள் அப­ராதம் விதித்­துள்­ளனர்.

யுக்­ரைனின் ஒரு பிராந்­தி­ய­மாக இருந்த கிரை­மி­யாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்­னுடன் இணைத்துக் கொண்டது.

கடந்த மே மாதம் நடை­பெற்ற திரு­ம­ண­மான பெண்­க­ளுக்­கான ‘திரு­மதி கிரை­மியா 2022 அழ­கு­ராணி போட்­டியில் ஒல்கா வலே­யேவா (Olga Valeyeva) எனும் 34 வயது பெண் முடி­சூட்­டப்­பட்­டி­ருந்தார்.

இவர் அண்­மையில் ‘ஒய் யு லுஸி செர்­வொனா கலினா’ எனும் யுக்­ரை­னிய தேசா­பி­மான பாடலை தனது நண்பி ஒரு­வ­ருடன் இணைந்து பாடும் வீடி­யோவை வெளி­யிட்டார்.

யுக்­ரை­னிய பாடலை பாடி­யதால் அழ­கு­ராணிக்கு அபராதம்! | Beauty Queen Fined For Singing Ukrainian Song

அதை­ய­டுத்து தீவி­ர­வாத குறி­யீ­டு­களை ஊக்­கு­வித்­த­தாக இவர்கள் இருவர் மீதும் கிரை­மி­யாவின் ரஷ்யா சார்பு அதி­க­ரி­களால் சுமத்­தப்­பட்­டது. இப்­பா­டலைப் பாடி­ய­மைக்­காக இரு யுவ­தி­களும் மன்­னிப்பு கோரினர்.

இவர்கள் மன்­னிப்பு கோரும் வீடி­யோவை கிரை­மி­யாவின் உள்­துறை அமைச்சு வெளி­யிட்­டி­ருந்­தது. தான் யுக்­ரை­னிய பாட­லொன்றை பாடி­ய­தா­கவும் அதன் உள் அர்த்­தத்தை தான் அறிந்­தி­ருக்­க­வில்லை எனவும் ஒல்கா வலே­யேவா(Olga Valeyeva) தெரி­வித்­துள்ளார்.

ஒல்­காவின் (Olga Valeyeva) நண்­பிக்கு 10 நாட்கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

யுக்­ரை­னிய பாடலை பாடி­யதால் அழ­கு­ராணிக்கு அபராதம்! | Beauty Queen Fined For Singing Ukrainian Song

ஒல்கா வலே­யேவா (Olga Valeyeva) ஒரு தாய் என்­பதால் அவ­ருக்கு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­டாமல் 40,000 ரூபிள் (சுமார் 2.4 லட்சம் இலங்கை ரூபா, சுமார் 55,000 இந்­திய ரூபா அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

வொலோ­டிமிர் அன்­ட­னோவிச் (Volodymyr Antonovich) என்­ப­வரால் 1875 ஆம் ஆண்டு இப்­பாடல் வெளி­யி­டப்­பட்­டது.

இப்­பாடல் யுக்­ரை­னி­யர்­களின் சுதந்­திர அபி­லா­ஷையை வெளிப்­ப­டுத்­து­வதால், 1919 முதல் 1991 ஆம் ஆண்டுவரை சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசாக யுக்ரைன் இருந்தபோது அப்பாடலுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறுப்பிடத்தக்கது.