104 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வரும் மூதாட்டி!

0
376

ஒரு மூதாட்டி 104 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வருவது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

1918ம் ஆண்டு பிறந்தவர் எல்சி ஆல்காக் பிரித்தானியாவைச் சேர்ந்தவர். 104 வயதான இவர் 2 உலகப் போர்கள், 4 ராணிகள் மற்றும் ராஜாக்கள், 25 பிரதமர்களை பார்த்துள்ளார்.

இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த மூதாட்டி ஒருவரின் நெகிழ்ச்சி செயல்! | Old Women Living In Same House 104 Years Memories

இந்த விடயத்தை எல்லாம் விட எல்சி ஆல்காக்கை வைரலாக்கிய விடயம் அவர் 104 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார் என்பது தான். யூகே-வில் ஹுத்வைட்டில் பார்கர் தெருவில் உள்ள ஒரு மாடி வீட்டில் தான் அந்த மூதாட்டி வசித்து வருகிறார்.

அந்த வீட்டை 1902ம் ஆண்டு எல்சி ஆல்காக்கின் தந்தை 7 பவுண்ட் 6 பென்னிக்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளார்.

இன்றைய மதிப்பின் படி அது 30 பவுண்ட்கள் ஆகும். இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.2,800 மாத வாடகையாக கணக்கிடப்பட்டுள்ளது.

அப்போது அந்த குடும்பத்தில் இருந்த 5 குழந்தைகளில் எல்சி ஆல்காக் மிகவும் இளையவராக இருந்துள்ளார்.

அதன் 1902ம் ஆண்டு 2 உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஆல்காக்கிற்கு திருமணம் நடந்துள்ளது. அவரது கணவர் பில்லுடன் தந்தை வாடகைக்கு இருந்த அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சரியாக ஆல்காக்கிற்கு 14 வயது இருந்த போது அவரது அம்மா நிமோனியாவல் மரணமடைந்தார். எனவே, கணவர் பில்லுடன் ஆல்காக் தந்தையின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த மூதாட்டி ஒருவரின் நெகிழ்ச்சி செயல்! | Old Women Living In Same House 104 Years Memories

பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் “என் அம்மா, எலிசா இறந்த பிறகு நான் என் அப்பாவைக் கவனித்துக் கொள்வதற்காக இங்கேயே தங்கினேன்.

எனக்கும் பில்லுக்கும் திருமணம் ஆனபோது ​​நாங்கள் இங்கேயே குடிபுகுந்தோம். வேறு வீட்டிற்கு போகவே இல்லை. என் அப்பா 1949ல் இறந்துவிட்டார். கடைசியாக 1960-களில் வீட்டை வாங்கினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

வீட்டை விலைக்கு வாங்கிய எல்சி குழந்தை பருவம் முதல் தான் வசித்து வந்த வீட்டை தந்தையின் மரணத்திற்கு பிறகு தானே வாங்க எல்சி முடிவெடுத்தார்.

எனவே, 1960ம் ஆண்டு கடன் பெற்று 250 பவுண்டுகளுக்கு வீட்டை வாங்கினார். தற்போது இந்த வீட்டின் சொத்து மதிப்பு 75 ஆயிரம் பவுண்டுகள் ஆகும்.

“நான் வேறு எங்கும் வாழ விரும்பியதில்லை. இது எனது வீடு, இது எனக்கு எல்லாவற்றையும் குறிக்கிறது. நாங்கள் வெளிப்புறத்தையும் வாங்கினோம். மிகக்குறைவாகவே மாற்றியுள்ளோம். ஒருவேளை நான் வேறு எங்காவது வசித்திருந்தாலும் இங்கு இருந்தது போல் நான் வேறு எங்குமே மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டேன்.”

வீட்டை வாங்கியதும் முதலில் அவர்கள் குளியலறையை மட்டுமே சீரமைத்து நவீனப்படுத்தியுள்ளனர். வேறு எதையும் பெரிதாக மாற்றவில்லையாம். எல்சியின் 75 வயது மகன் ரே தனது தாயார் இந்த வீட்டை விட்டு எங்குமே சென்றதில்லை என்றும் இந்த இடத்தை பல நினைவுகள் நிறைந்த இடமாக பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

எல்சி இந்த வீட்டை மிகவும் நேசிக்கிறார். எப்படி என்றால் 104 வயதாகும் அவர் இருட்டில் கூட வீட்டின் மூலை முடுக்கை எல்லாம் நன்றாக சென்றடையும் படி அணு அணுவாக வீட்டை பற்றி அறிந்து வைத்துள்ளார்.