15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி துஷ்பிரயோகம் செய்த 22 வயது இளைஞன்!

0
309

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் 04-10-2022 அன்று உத்தரவிட்டுள்ளது.

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக தெரிவித்து குறித்த இளைஞர் அப்பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் வைத்து சிறுமியை துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

15 வயது சிறுமிக்கு 22 வயது இளைஞனால் நேர்ந்த கொடூரம்! | 15 Year Old Girl Was Abused 22 Year Old Boy

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞனை கைது செய்து செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 18ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

15 வயது சிறுமிக்கு 22 வயது இளைஞனால் நேர்ந்த கொடூரம்! | 15 Year Old Girl Was Abused 22 Year Old Boy