லண்டனில் தலைகீழாக ஆடை அணியும் மக்கள்!

0
1165

லண்டன் மக்களில் ஒரு சிலர் தங்களது ஆடைகளை தலைகீழாக அணிந்து வருகின்றனர். குழந்தை பருவத்தில் நமக்கு தெரியாமல் ஆடைகளை தலைகீழாக அணிவதுண்டு.

இப்போதும் சமயத்தில் நாம் ஆடைகளை தவறுதலாக தலைகீழாக அணிவதுண்டு. அவசரம் முன்பக்கம் எது பின்பக்கம் எது என்ற குழப்பம் போன்றவற்றை காரணமாக கூறலாம்.

லண்டன் நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் மக்கள் தெரிந்தே அவர்களது ஆடைகளை தலைகீழாக அணிந்து வருகின்றனர். தலைகீழாக அணிந்த உடைகளுடனே வெளியில் செல்கிறார்கள்.

இதற்கு இவர்கள் கூறும் காரணம் பலரை மனம் நெகிழ செய்துள்ளது. LADbible தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தது. அதில் மக்கள் தலைகீழாக உடையணிந்தவாறு காஃபி ஷாப்களுக்கு செல்வதும் மெட்ரோக்களில் பயணிப்பதும் பதிவாகியுள்ளது.

அவர்கள் ஆடைகளை மாற்றி அணிந்திருப்பது குறித்து அவர்களுக்கு வருத்தமில்லை. இன்ஸ்டாவில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் “தற்கொலை குறித்த விழிப்புணர்வு மாதத்தில் இவ்வாறு உடையணிந்து மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்கள்” என தலைப்பிடப்பட்டிருந்தது.

மனதில் பூட்டி வைக்கப்பட்ட வருத்தம், கோபம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் நொடிப்பொழுதில் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் ஏராளம்.

மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண மருத்துவமும் தொழில்நுட்பமும் உள்ளது என சில மனிதர்களின் மன நிலை மாறிவிட்டாலும் மன அழுத்தம் அதனால் ஏற்படும் உயிர்பலிகள் குறைந்தபாடில்லை.

இதனால், உள்ளே மறைத்துவைக்கப்பட்டுள்ள ஆதங்கங்களை வருத்தங்களை வெளிபடுத்தும் உள் அர்த்ததை மையமாக கொண்டு ஆடைகளை தலைகீழாக அணிந்து வருகின்றனர் பிரிட்டன் மக்கள்.

இந்த பிரச்சாரத்தின் பெயர் “Inside Out”. தற்கொலை எண்ணம் உள்ளவர்களை கண்டறிந்து காப்பாற்றும் நோக்கில் இந்த பிரச்சாரம் செய்யப்படுகிறது.

டிவிட்டரிலும் இந்த விழிப்புணர்வு குறித்த வீடியோ பகிரப்பட “Ask me why?” என்ற ஹேஷ் டேக் உடன் பயனர்கள் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

அப்படி கேட்பவர்களுக்கு பதிலளித்து அதன் மூலம் அதிக மக்களுக்கு இந்த கேம்பெயினை கொண்டு செல்வது அதன் நோக்கம். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த விளையாட்டு வீரர்கள் உட்பட மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் இதில் இணைந்துள்ளனர்.