பூனைக்காக மனி­தனை கொலை செய்த யுவதி!

0
467

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவதி ஒருவர், பூனை­யொன்றை காப்­பாற்­று­வ­தற்­காக மனிதர் ஒரு­வரை கொலை செய்­த­தாக அதி­கா­ரிகள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

கலி­போர்­னியா மாநி­லத்தில் வசிக்கும் ஹனா ஸ்டார் எஸ்ஸர்(Hana Star Esser) எனும் 20 வய­தான யுவதி பூனைகள் மீது மிகுந்த பாசம் கொண்­டவர்.

இவர் 40 வய­தான லூயிஸ் அன்­தனி விக்டர்(Louis Anthony Victor) என்­பவர் மீது வேண்­டு­மென்றே வாக­னத்தை ஏற்றி கொலை செய்தார் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

பூனை­யொன்றின் மீது வாக­னத்தை ஏற்றி அதனை கொலை செய்ய முயற்­சிப்­ப­தாக ஹனா எஸ்ஸர் கரு­தினார். இதனால் தனது வாக­னத்­தி­லி­ருந்து இறங்­கிய எஸ்ஸர்(Hana Star Esser) , விக்­டரை திட்­டினார்.

பூனைக்காக மனி­தரை கொலை செய்த 20 வய­து யுவதி! | A 20 Year Old Girl Killed A Man For A Cat

அப்­போது எஸ்­ஸ­ருடன் பேசு­வ­தற்கு விக்டர் முயன்றார். எனினும், மீண்டும் தனது வாக­னத்­துக்குள் ஏறிய ஹனா எஸ்ஸர்(Hana Star Esser) , வாக­னத்தை திருப்பி அதனை விக்­டரை நோக்கி செலுத்­தினார் என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இதன்­போது, வேண்­டு­மென்றே விக்­டரை (Louis Anthony Victor) நோக்கி வாக­னத்தை திருப்பி மிக வேக­மாக அவர் மீது ஹனா எஸ்ஸர் (Hana Star Esser) மோதி­ய­தா­கவும் இதனால், விக்டர் தூக்கி வீசப்­பட்டார் எனவும் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

இச்­சம்­ப­வத்தில் விக்டர்(Louis Anthony Victor) ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்தார். இதை­ய­டுத்து ஹனா எஸ்­ஸரை பொலிஸார் கைது செய்­தனர்.

இது தொடர்­பான வழக்கில் அவர் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டால் அவருக்கு 20 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.