18 வயது இளம்பெண் 78 வயது முதியவரை காதலித்து திருமணம்; வைரலாகும் புகைப்படம்

0
1275

18 வயது இளம்பெண் ஒருவர் 78 வயது முதியவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் முக்கியமான நிகழ்களில் ஒன்று ஆகும். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரஷாத் மங்காகோப் 78 வயதான இவர் ஒரு விவசாயி.

அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஹலிமா அப்துல்லாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

90ஸ் கிட்ஸ்களை கடுப்பேத்திய 78 வயது முதியவர்! | 78 Year Old Man Who Killed 90S Kids

பார்ட்டியில் சந்திப்பு

பிலிப்பைன் நாட்டில் உள்ள ககாயன் மாகாணத்தில் இரவு விருந்து ஒன்றில் ரஷாத் மங்காகோப் மற்றும் ஹலிமா அப்துல்லா இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்துள்ளது.

அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

90ஸ் கிட்ஸ்களை கடுப்பேத்திய 78 வயது முதியவர்! | 78 Year Old Man Who Killed 90S Kids

இவர்களின் திருமணம் உறவினர்கள் சூழ வெகு கோலகலமாக நடந்துள்ளது. இந்த நிலையில் 78 வயது முதியவரை 18 வயது இளம் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்ட திருமண புகைப்பட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.