இலங்கை கல்வி நிர்வாக சேவை; அரச உத்தியோகத்தர் விசேட பணியாளர் பதவி நியமனம்

0
206

வட மாகாணத்தில் இலங்கை கல்வி நிருவாக சேவை பிரமாணக் குறிப்பு service minutesக்கு முரணான வகையில் பதில் கடமையொன்று வழங்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.

அது பின்வரும் காரணங்களின் நிமித்தம் முற்றிலும் தவறானதாகும்.

21.08.2015 ம்ஆண்டு வெளியிடப்பட்ட1928/28ம் இலக்க இலங்கை கல்வி நிருவாக சேவையின் பிரமாணக் குறிப்பின் பிரிவு 6.2 க்குரிய குறிப்பு பின்வருமாறு உள்ளது.

1.இலங்கை கல்வி நிருவாக சேவை தரம்11 மற்றும் தரம் 111 விசேட ஆளணிக்குரிய உத்தியோகத்தர்களுக்கு பொது ஆளணி பதவிகளை வகிக்க முடியாது.

2.இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 11 மற்றும் 111 பொது ஆளணிக்குரிய உத்தியோகத்தர்கள் விசேட ஆளணிக்குரிய பதவிகளை வகிக்க முடியாது.

ஆனால் வடக்கில் இதற்கு முரணாக SLEAS-11 பொது ஆளணிக்குரிய உத்தியோகத்தர் ஒருவருக்கு SLEAS -111ற்குரிய விசேட ஆளணி ஆங்கில பாடத்திற்கான தற்காலிக கடமை வழங்கப்பட்டுள்ளது. இது சேவை பிரமாண குறிப்பிற்கு முரணானது.

மேலும் தாபனக்கோவை மற்றும் அரசாங்கசேவை ஆணைக்குழுவின் நிருவாக நடவடிக்கைக் கோவைக்கமைய உயர்ந்த தர பதவி வகிக்கும் ஒருவர் குறைந்த தர பதவியை வகிக்க முடியாது. அதாவது SLEAS-11 க்குரிய ஒருவர் SLEAS-111 பதவியை வகிக்க முடியாது.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் மட்டும் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் என்பன மிகவும் பலவீனமாகவே உள்ளன.