பிக்பாஸ் போட்டியாளர்களின் முழு விவரம்!

0
286

மிகவும் எதிர்பார்க்கப்படும் பிக்பாஸ் சீசன் 6 விரைவில் துவங்க உள்ளது. அக்டோபர் ஒன்பதாம் திகதி மாலை மிக பிரம்மாண்டமாக துவங்க இருக்கிறது பிக்பாஸ் சீசன் 6.

வருடா வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெறும் பிக்பாஸிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழில் பிக்பாஸ் ஐந்து சீசன்களை முடித்து ஆறாவது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது.

பிக்பாஸ் தொடங்குவதற்கு முன்பே அதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த ஆர்வம் மக்களிடையே எழுவது வழக்கம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

அந்த வகையில் தற்போது கலந்து கொள்ள இருக்கும் 18 நபர்களின் பட்டியல் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அவர்கள் யார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

முதல் போட்டியாளராக உள்ளே செல்ல இருப்பவர் மைனா நந்தினி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலமாக அறிமுகமானவர். மதுரையைச் சேர்ந்த இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருப்பார். விருமன் படத்தில் கூட நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று இருந்தார். தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். காமெடியாகவும் துருதுருவென இருக்கும் மைனா நந்தினி பிக்பாஸ் சீசனில் முதல் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாகவே தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

இரண்டாவது போட்டியாளராக மணிகண்டன் என்பவர் உள்ளே அனுப்பப்படலாம் என்று தெரிகிறது. மணிகண்டன் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன் தம்பி ஆவார். இவர் மாடலிங் துறையிலும் இருக்கிறார். காக்கா முட்டை என்ற படத்தின் மூலமாக பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மாடலிங் துறையில் இருக்கும் மணிகண்டன் திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். சன் டிவியில் சில சீரியல்களில் நடித்து வரும் இவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

மூன்றாவது போட்டியாளராக மதுரை முத்து கலந்து கொள்வார் என்று தெரிகிறது. மதுரை முத்து சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக மிகப் பிரபலமானவர். பின்னர் விஜய் டிவிக்கு வந்த அவர், பல காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று இருந்தார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமானார். எனவே இவரும் பிக்பாஸில் களம் இறங்கினால் காமெடியில் வேற லெவலில் இருக்கும் என்று திட்டம் போட்டு இவரையும் களம் இறக்க உள்ளது விஜய் டிவி. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

நான்காவது போட்டியாளராக நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டரை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப இருப்பதாக தெரிகிறது. இவர் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை வனிதாவின் முன்னாள் காதலர் ஆவார். இரண்டு திருமணங்களை விவாகரத்து செய்த பின்னர் ராபர்ட் உடன் சில காலம் காதலில் இருந்தார் வனிதா. இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்திருக்கிறார்கள். ராபர்ட்டை களம் இறக்குவதன் மூலம் அவர் வனிதாவை பற்றி ஏதாவது பேசுவார். அதனால் சில சர்ச்சையான கண்டன்ட் கிடைக்கும் என்று விஜய் டிவி கணக்கு போட்டு இவரையும் உள்ளே இறக்க திட்டமிட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

ஐந்தாவது போட்டியாளராக ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து வந்த விஜே அர்ச்சனா கலந்து கொள்வார் என்றே தெரிகிறது. விஜே அர்ச்சனா சமீபத்தில் சீரியலில் இருந்து விலகினார். அவர் அப்போது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன். விரைவில் அந்த செய்தி குறித்து அறிவிக்கிறேன் என்று கூறியிருந்தார். இதனால் அவர் பிக்பாஸில் கலந்து கொள்ளவே அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

ஆறாவது போட்டியாளராக சின்னத்திரை நடிகை ஆயிஷா கலந்து கொள்வார் என்று தெரிகிறது. இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். எப்பொழுதும் பிக்பாஸ் ஜீ தமிழில் இருந்து ஒரு நபரை அழைத்து வந்து விடுவது வழக்கம். ஒரு சீசனில் ஜீ தமிழில் பணியாற்றிக் கொண்டிருந்த விஜே அர்ச்சனாவை கஷ்டப்பட்டு அழைத்துக் கொண்டு வந்தார்கள். அது போல் தற்போது ஆயிஷாவையும் ஜீ தமிழில் இருந்து பிக்பாஸ் குழு அழைத்து வரும் என்று தெரிகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

ஏழாவது போட்டியாளராக சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி உள்ளே செல்ல இருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 7c என்ற நாடகத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பினர் ஜீ தமிழில் சில நாடகங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக சர்ச்சைகளை கிளப்பி வரும் ஸ்ரீநிதியை உள்ளே அனுப்பினால் நன்றாக கன்டென்ட் கிடைக்கும் என்ற காரணத்தினால் பிக்பாஸ் இவரையும் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

எட்டாவது போட்டியாளராக குக் வித் கோமாளி புகழ் ரக்ஷன் செல்ல உள்ளதாக தெரிகிறது. குக் வித் கோமாளியில் மூன்று சீசன்களையும் தொகுத்து வழங்கி வருபவர் ரக்ஷன். இதில் கோமாளிகளுக்கு நிகராக ரக்ஷனுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ரக்ஷன் இரண்டு மூன்று படங்களிலும் நடித்திருக்கிறார். இருந்தாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் விஜய் டிவியின் முகங்களில் ஒருவராக இருக்கும் அவரையும் உள்ளே அனுப்ப பிக்பாஸ் திட்டமிட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

ஒன்பதாவது போட்டியாளராக வி ஜே மகேஸ்வரி. விஜே மகேஸ்வரி ஆரம்பத்தில் சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார், பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராகவும் நடித்திருக்கிறார், சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பிக்பாஸ் இவருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

பத்தாவது போட்டியாளராக ரட்சிதா மகாலட்சுமி உள்ளே செல்வார் என்று தெரிகிறது. ரட்சிதா மகாலட்சுமி ஏற்கனவே விஜய் டிவியில் ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று சீரியலை விட்டு விலகி இருந்தார். பின்னர் கலர்ஸ் தமிழுக்குச் சென்ற அவரின் சீரியல் தொடங்கிய சில காலங்களிலேயே முடிந்தது. இதனால் அவர் அந்த டிவியை கடுமையாக விமர்சித்து இருந்தார் ரட்சிதா. மேலும் தனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார். எனவே அவரும் பிக்பாஸுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

பதினோராவது போட்டியாளராக சமீபத்தில் திருமணம் ஆன ரவீந்தரை அனுப்ப பிக் பாஸ் திட்டமிட்டுள்ளது சமீப காலமாக இணையத்தில் வைரல் தம்பதிகளாக வலம் வருபவர்கள் ரவீந்தர் மகாலட்சுமி. இவர்களின் திருமணம் குறித்து பலரும் பேசி வந்தனர். இவர் ஏற்கனவே பிக்பாஸ் பற்றி விமர்சனங்களை செய்து, அதன் மூலமாக பிரபலமானவர். எனவே ரவீந்தரை உள்ளே அனுப்பினால் சில கண்டன்ட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து அவரை அனுப்ப இருப்பதாக தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

12வது போட்டியாளராக விஜே கதிரவன். இவர் சன் மியூசிக் பல வருடங்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இருந்தபோதிலும் இவருக்கு சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் பிக் பாஸில் கலந்து கொள்ள இருப்பதாகவே தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

13வது போட்டியாளராக திரைப்பட நடிகை விசித்ரா உள்ளே அனுப்பப்பட இருப்பதாக தெரிகிறது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லி வேடங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக முத்து படத்தில் இவர் நடிப்பில் அசத்தி இருப்பார். சன் டிவியில் சில நாடகங்களிலும் நடித்து இருப்பார். இவரும் அதிகபட்சம் உள்ளே செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

14-ஆவது போட்டியாளராக அமுதவாணன் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. அமுதவாணன் விஜய் டிவியில் அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் .மிமிக்கிரியில் கைதேர்ந்த இவர், காமெடியில் அசத்தும் ஒரு நபராக இருக்கிறார். அதனால் இவரையும் உள்ளே அனுப்பினால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கணக்கு போட்டு பிக்பாஸ் இவரையும் வீட்டிற்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விவரம்! | Full Details Of Bigg Boss Contestants

இவர்களுடன் மாடல் அழகியான ஷில்பா மஞ்சுநாத், சூப்பர் மாடல் ஷெரினா, கானா பாடகர் வசந்த், ராப் பாடகர் அசல் கோலார் போன்ற 18 நபர்களை உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Shilpa Manjunath