புடின் எச்சரிக்கையை தவிடுபொடியாக்கிய உக்ரைன்!

0
459

ரஷ்யா ஆக்கிரமித்திருந்த கெர்சன் நகரின் இரண்டு குடியிருப்புகளை உக்ரைன் படைகள் மீட்டுள்ளன.

உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையின் உச்சமாக கிழக்கு உக்ரைனின் மிக முக்கியமான நான்கு நகரங்களை ரஷ்யாவின் அங்கமாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

புடின் எச்சரி்கையை தவிடுபொடியாக்கிய உக்ரைன்! | Putin S Warning To Ukraine

அத்துடன் ரஷ்ய பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அணு ஆயுதங்களையும் பயன்படுத்த தயங்க மாட்டேன் என இணைப்பு விழாவில் எச்சரிக்கை செய்தி ஒன்றிணையும் தெரிவித்து இருந்தார்.

புடின் எச்சரி்கையை தவிடுபொடியாக்கிய உக்ரைன்! | Putin S Warning To Ukraine

இந்த நிலையில் ரஷ்ய படைகளால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ரஷ்யாவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனின் Arkhanhelske மற்றும் Myrolyubivka ஆகிய இரண்டு சிறிய குடியேற்றங்களை உக்ரைனிய ஆயுதப் படை விடுவித்துள்ளது.

புடின் எச்சரி்கையை தவிடுபொடியாக்கிய உக்ரைன்! | Putin S Warning To Ukraine

இத்தகவலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். ரஷ்ய படைகளுக்கு எதிராக முன்னணியில் தாக்குதல் நடத்தி தங்களை வேறுபடுத்திக் காட்டிய உக்ரைனிய படைகளின் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு நன்றி தெரிவிக்கும் போது ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இரண்டு சிறிய குடியேற்றங்களின் விடுவிப்பு குறித்து அறிவித்தார்.

அத்துடன் , உக்ரைன் படைகளின் வெற்றி டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள லைமனுக்கு மட்டும் அல்ல என உக்ரேனிய அதிபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.