நடுத்தெருவில் இலங்கை; எந்த நாடும் உதவமாட்டாது!

0
399

சர்வதேச சமூகம் இலங்கையை கைவிட்டு விட்டது. எந்தவொரு நாடும் எமது நாட்டுக்கு ஒத்துளைப்பினை வழங்கும் நிலைப்பாட்டில் இல்லை. இவ்வாறு ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாடு மிகவும் பாரிய பொருளாதார நெருக்கடியில் காணப்படுகின்றது. அது மாத்திரமல்லாது ஏனைய வலைய நாடுகளின் மத்தியில் எமது நாடு மந்த போசனை மட்டத்தினை எட்டியுள்ளது. இதற்கு மிகவும் பிரதான காரணம் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியாகும். பொருளாதாரம் பாரியலவில் வீழ்ச்சிகண்ட நாடாக எமது நாடு ஆக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு தீர்வு குறித்து வினவும் போது சர்வதேச நாணய நிதியத்தை மாத்திரமே எமது நாடு எதிர்பார்த்துள்ளது. மாறாக நாட்டினுள் பொருளாதாரத்தினை மேம்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியம் எப்போது அந்தப் பணத்தினை தந்துதவும் என்ற கால எல்லையும் இல்லை. இந்நிலையில் நாட்டில் அதிகளவிலான மனித உரிமை மீறல்களும் இடம்பெற்று வருகின்றன. ஆனால் அதனை தடுக்க உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாம் ஜெனிவா அமர்வில் கலந்து கொன்டோம். அதன்போது மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் எமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சி ஆக்கப்பட்டுள்ளது எனத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாம் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பினை கேட்டாலும் கூட சர்வதேசத்தின் உதவியானது எமது நாட்டிற்கு கிடைப்பதற்கு ஏற்ற சூழல் எமது நாட்டில் உள்ளதாக தெரியவில்லை எனத் தெரிவித்தார்.