முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்போவதில்லை; முச்சக்கரவண்டி சங்கங்கள்!

0
105

நாட்டில் நேற்றைய தினம் (01-10-2022) முதல் பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க வழி இல்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை மேலும் 10 லீற்றரால் அதிகரிக்குமாறு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முச்சக்கரவண்டி சங்கங்கள்! | No Reduction In Fees Auto Association Announcement