ஆயுர்வேத மசாஜ் மையப் போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி!

0
88

ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கல்கிஸ்ஸ செரமிக் வீதியிலுள்ள இடமொன்றில் நடாத்திச் செல்லப்பட்ட குறித்த விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது விபச்சார விடுதியை நடத்தி வந்த 25 வயதுடைய ஆணும் இரண்டு இளம் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிபில மற்றும் திஹகொட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 25 மற்றும் 35 வயதுடைய இரண்டு யுவதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மசாஜ் மையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி! | Prostitution Under The Guise Of A Massage Center