விண்வெளியில் யோகாசனம் செய்து அசத்தும் வீராங்கனை! வைரல் வீடியோ

0
92

தற்போது இணையத்தில் நம்மை வியக்க வைக்ககூடிய வகையில் வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

விண்வெளியில் யோகாசனம்

விண்வெளியில் யோகாசனம் செய்யும் விண்வெளி வீராங்கனையின் வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

பூமியிலிருந்து 408 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் 45 வயதான சமந்தா கிறிஸ்டோஃபெரெட்டி நீண்ட நாட்களாக தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.

வைரல் வீடியோ

புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் எலாஸ்டிக் பேண்ட் மாட்டிக்கொண்டு காஸ்மிக் கிட் பயிற்சியாளரின் உதவியுடன் சமந்தா சமநிலையில் யோகாசனம் செய்தார்.

இந்த வீடியோ, தற்போது இணையவாசிகள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.