சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த நபர்; 13 வருடங்களின் பின் கைது

0
305

கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 13 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிஎன்ஏ பரிசோதனை

பாடசாலை மாணவி கொலை; 13 வருடங்களின் பின்னர் சிக்கிய நபர்! | Person Caught After 13 Years Crime

குறித்த நபர் அஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து டிஎன்ஏ பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதான , சந்தேக நபர் இன்று (வியாழக்கிழமை) அவிசாவளை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் .

பாடசாலை மாணவி வன்புணர்வு

2009 ஆம் ஆண்டு அஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் பாடசாலை சீருடையுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கொலையாளி தொடர்பான வழக்கு தற்போது அவிசாவளை மேல் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அஹலியகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பாடசாலை மாணவி கொலை; 13 வருடங்களின் பின்னர் சிக்கிய நபர்! | Person Caught After 13 Years Crime