விடைத்தாளில் எழுத்துப்பிழை: மாணவனை கொலை செய்த ஆசிரியர்!

0
102

விடைத்தாளில் இருந்த எழுத்துப் பிழைக்காக தலித் மாணவரை அடித்துக் கொன்றிருக்கிறார் ஆசிரியர். குச்சியால் அடித்தும், குத்தியும் சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறார் அறிவியல் ஆசிரியர். உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அவுரியா மாவட்டத்தில் வைஷோலி கிராமம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் நிகித்குமார், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.

கடந்த 13ஆம் தேதி அன்று அறிவியல் ஆசிரியர் அஸ்வினி சிங் மாணவர்களுக்கு டெஸ்ட் வைத்துள்ளார். இந்த தேர்வில் நிகித்குமார் விடைத்தாளில் எழுத்து பிழை செய்துள்ளார்.

இதை பார்த்த அஸ்வினி சிங்கிற்கு ஆத்திரம் வந்திருக்கிறது. உடனே அந்த மாணவரின் தலை முடியை பிடித்துக் கொண்டு குச்சியால் அடித்து உச்சியால் குத்தியும் சரமாரியாக தாக்கியிருக்கிறார்.

இதில் அந்த மாணவர் மயக்கமடைந்து கீழே விழுந்திருக்கிறார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியாததால் பதறிப்போன ஆசிரியர் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கெத்தாவா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவ செலவு 40,000 ரூபாயை ஆசிரியர் அஸ்வினி குமார் ஏற்றிருக்கிறார். சிகிச்சையில் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிகித் குமார் நேற்று 26ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி இழந்திருக்கிறார்.

மாணவன் உயிரிழந்ததும் அச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதை எடுத்து அவுரியா மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி குமார் மீது பல்வேறு பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர் அஸ்வினிக்குமாரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளனர்.