சார்லஸ் மன்னரின் மகன் என்று கூறியவர் வெளியிட்ட முக்கிய கடிதம்!

0
108

பிரித்தானிய மன்னர் சார்லஸ் (King Charles III) – கமீலா (Camilla) தம்பதிக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறிவரும் சைமன் டொரண்டே டே (Simon Torrent Day) என்பவர் ராணிக்கு தான் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வசிப்பவர் சைமன் டொரண்டே டே (56). இவர் சார்லஸ் (King Charles III) – கமீலா (Camilla) தம்பதிக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருகிறார்.

அதன்படி தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போது தன்னிடம் நீ சார்லஸ் (King Charles III)- கமீலாவிற்கு (Camilla) ரகசியமாக பிறந்த மகன் என கூறியதாக தெரிவிக்கிறார்.

மன்னர் சார்லஸின் மகன் என கூறிய நபர் வெளியிட்ட முக்கிய கடிதம்! | Important Letter Man Who Claimed Son King Charles

ஆனால் இது தொடர்பில் சார்லஸ் (King Charles III) எதுவும் பேசவில்லை ஏனெனில் இது குறித்து பேசி ஊடக விளம்பரங்களை வழங்க சார்லஸ் (King Charles III) விரும்பவில்லை.

இந்த நிலையில் சைமன் (Simon Torrent Day) தற்போது மகாராணிக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்த விவாகரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் அவர் கோரியிருந்தார்.

கடிதத்தில் எழுதியிருந்த தகவல்களை இதுவரையில் வெளியிடாமல் இருந்த சைமன் தற்போது உலகம் இதை படிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறி கடிதத்தை வெளியிட்டுள்ளார், இந்த கடிதம் கடந்தாண்டு நம்பவரில் எழுதப்பட்டிருக்கிறது.

மன்னர் சார்லஸின் மகன் என கூறிய நபர் வெளியிட்ட முக்கிய கடிதம்! | Important Letter Man Who Claimed Son King Charles

இதன்போது என் கடிதத்திற்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் ராணி உயிரிழந்துவிட்டார். இது எனக்கு பலத்த ஏமாற்றம் மற்றும் வருத்தம் என சைமன் கூறுகிறார்.

அந்த கடிதத்தில், எப்படி குயின்ஸ்லாந்து கவர்னர் மூலம் ராணியாரை அணுக முயன்றார் என குறிப்பிட்டிருக்கிறார். இதோடு, என்னுடைய 8 வயதில் நீல நிறமான கண்களை பழுப்பு நிறத்தில் மாற்றினார்கள். 15 வயதில் என் பற்களில் மாற்றத்தை செய்தனர்.

இதெல்லாம் என் உண்மையான அடையாளத்தை மறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றே நம்புகிறேன். என்னை வளர்த்த பாட்டி தான் நான் சார்லஸ் (King Charles III) – கமீலாவின் (Camilla) மகன் என கூறினார்.

எனது குடும்பத்தின் சார்பாக நான் எழுதுகிறேன், இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு உங்கள் உதவியை நான் கேட்கிறேன். நீங்கள் முன் வந்து எனக்கு உதவ கடவுள் உங்களுக்கு சக்தியை கொடுக்கட்டும் என எழுதியுள்ளார்.

மேலும் சைமன் (Simon Torrent Day) கூறுகையில், சார்லஸுடன் (King Charles III) நேரடியாக போராடி அவரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் எனவும் அவர் தற்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.