முல்லைத்தீவு வைத்தியசாலையில் முதன் முதலில் அறுவைச்சிகிச்சை ; மருத்துவர்கள் சாதனை

0
273
முல்லைத்தீவு வைத்தியசாலையில் முதன் முதலில் இடம்பெற்ற அறுவை சிகிச்சை ! மருத்துவர்கள் சாதனை | The First Surgery In Mullaitivu Hospital

முல்லைத்தீவு வைத்தியசாலையில் முதன் முதலில்  புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு  அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வாய், முகம் மற்றும் தாடை சம்மந்தமான சிகிச்சை நடவடிக்கைகள் சத்திர சிகிச்சை நிபுணர்களினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சில சிகிச்சைகளுக்காக நோயாளர்கள் வெளி மாவட்டங்களான யாழ்ப்பாணம், வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கு அறுவைச்சிகிச்சை

இந்நிலையில் கடந்த 27.09.2022 அன்று சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அகிலன் தலைமையிலான குழுவினரால் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு ஆறு மணி நேர முயற்சியின் பலனால் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் முதல் முதலாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் முதன் முதலில் இடம்பெற்ற அறுவை சிகிச்சை ! மருத்துவர்கள் சாதனை | The First Surgery In Mullaitivu Hospital