பிரபல கனேடிய நடிகர் கொர்மியர் விபத்தில் சிக்கி மரணம்

0
102

பிரபல கனேடிய நடிகர் கொர்மியர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். “ஹார்ட்லாண்ட்” (“Heartland”) மற்றும் “அமெரிக்கன் கோட்ன்” (“American Gods”) போன்ற தொலைக்காட்சி தொடர்களில் கொர்மியர் நடித்துள்ளார்.

கொர்மியர் தனது 33 வயதில் இவ்வாறு விபத்தில் சிக்கில் உயிரிழந்துள்ளார்.

துயரமிகு விபத்து ஒன்றினால் தமது சகோதரர் காலமானார் என அவரது சகோதரி ஸ்டெபின் கொர்மியர் தெரிவித்துள்ளார்.

தமது சகோதரருக்கு சிகிச்சை அளித்த றொரன்டோ தீவிர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சகோதரரின் நண்பர்கள், சக நடிகர்கள், ரசிகர்கள் என்ன பல்வேறு தரப்பினரும் இரங்கல் வெளியிட்டு வருவதாகவும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டெபின் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி தொடர் நிர்வாகத்தினர் உள்ளிட்ட பல தரப்பினரும் ரொபர்ட் கொர்மியரின் மரணத்திற்காக இரங்கல் வெளியிட்டுள்ளனர். 

கொர்மியரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.