திருகோணமலையில் 1008 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்ய முடிவு!

0
111

அமைத்துள்ள இடம்

திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தை அன்மித்து ஈஸ்வரபுரம் அமைந்துள்ளது.

சைவமும், தமிழும் தலைத்து நின்று ஓங்க தன்னாலான பணியினை தென்கைலை ஆதீனம் மேற்கொண்டு வருகின்றது.

திருகோணமலையில் 1008 லிங்கங்களை வைத்து பிரதிஷ்டை செய்ய தீர்மானம் | Decision To Consecrate 1008 Lingams In Trincomalee

அந்தவகையில் தென்கயிலை ஆதீனத்தில் 1008 லிங்கங்களை வைக்க தீர்மானித்துள்ளதாக அகத்தியர் அடிகள் தெரிவித்துள்ளார். இதன்படி இதுவரை 300 லிங்கங்களை வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் சிவ பூசை செந்தமிழ் முறையிலான சிவ வழிபாடு யாகங்கள் குடமுலுக்கு, நித்திய பூசைகள், விசேஷ பூசைகள் என்பன செந்தமிழ் அகமத்தைக் கொண்டு இங்கே நடைபெற்று வருவது இதன் விஷேட அம்சமாக கருதப்படுகின்றது.