உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக பிடியாணை !

0
179

கிருலப்பனை – பொல்ஹேன்கொட அலன் மெத்தினியாராம விகாரையின் பிக்குவான உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.

ஒலிப்பெருக்கியின் மூலம் தொந்தரவு ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட தனி ஆள் மனுவொன்றின் அடிப்படையில் இந்த உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒலி மாசு

ஒலிப்பெருக்கியின் மூலம் தொந்தரவு ஏற்படுத்திய தேரர்!: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Issues Arrest Warrant On Dhammaloka Thera

காலை ஐந்து மணி முதல் ஆறு மணிவரையிலான காலப்பகுதிக்குள் ஒலிப்பெருக்கியை பயன்படுத்தியதன் காரணமாக தொந்தரவு ஏற்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட மற்றும் சுற்றாடல் நீதி மையம் உள்ளிட்ட ஆறு தரப்பினர் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் பரிசீலித்துள்ளது. 

எனினும் பிரதிவாதியான உடுவே தம்மாலோக்க தேரர் மன்றில் முன்னிலையாகவில்லை.

மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 98வது பிரிவின்படி, இப்பகுதியில் ஒலி மாசு ஏற்படுவதைத் தடுக்க, ஆறு புகார்தாரர்களும் இந்த தனிப்பட்ட வழக்கின் மூலம் நீதிமன்றத்தினை நாடியிருந்தனர். 

நீதிமன்றம்

அலன் மதினியாராமயவில் உள்ள ஒலிபெருக்கிகளில் இருந்து வெளிவரும் ஒலிகளை தங்கள் விருப்பத்திற்கு மாறாக கேட்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக ஆறு முறைப்பாடுதாரர்களான கவிந்த ஜயசிங்க, கலாநிதி கலிங்க களுபெரும, டிரென் ஆர். ஹலோக், மிலிந்த மொரகொட, கமலேஷ் ஜோன்பிள்ளை மற்றும் சுற்றாடல் நீதிக்கான நிலையம் ஆகிய 6 பேர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

விகாரையில் பல தடவைகள் தாம் செய்த முறைப்பாடுகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.