துபாயில் உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம்!

0
223

துபாயில் ஸ்தாபிக்­கப்­பட்ட ஆட்கள் இல்­லாத ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் 20 லட்சம் பேரின் கவனத்தை ஈர்த்­துள்­ளது. துபாய் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் 2017 ஆம் ஆண்டு துபாயில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் இது­வாகும். பொலிஸ் நிலை­யத்­துக்கு செல்­லாமல் டிஜிட்டல் முறையில் பல்­வேறு சேவை­களை இப்­பொலிஸ் நிலை­யத்தின் ஊடாக பெற்­றுக்­கொள்­ளலாம்.

20 லட்சம் பேரை ஈர்த்­த ஸ்மார்ட் பொலிஸ் நிலையம்; எங்குள்ளது தெரியுமா? | Smart Police Station Attracted 20 Lakh People

இந்த பொலிஸ் நிலையம் ஸ்தாபிக்­கப்­பட்டு 5 வரு­டங்கள் பூர்த்­தி­ய­டைந்­துள்ள நிலையில், இது­வரை 20 லட்­சத்­துக்கு அதி­மானோர் டிஜிட்டல் முறையில் விஜயம் செய்­துள்­ள­தா­கவும் 363,189 பரி­வர்த்­த­னைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

20 லட்சம் பேரை ஈர்த்­த ஸ்மார்ட் பொலிஸ் நிலையம்; எங்குள்ளது தெரியுமா? | Smart Police Station Attracted 20 Lakh People

“ஒரு நாளில் 24 மணித்­தி­யா­லங்­களும் வாரத்தில் 7 நாட்­களும் மனிதத் தலை­யீ­டுகள் இல்­லாத ஸ்மார்ட் பொலிஸ் சேவையை வழங்­கு­வதில் முன்­னோ­டி­க­ளாகத் திகழ்வில் நாம் பெரு­மை­ய­டை­கிறோம்” என துபாய் ஸ்மார்ட் பொலிஸ் அதிகாரி மேஜர் ஜெனரல் அலி அஹமத் கனீம் தெரிவித்துள்ளார்.