சமர்ப்பிக்கப்படவுள்ள மே9 அறிக்கை ..

0
562

கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விசேட குழுவின் அறிக்கை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனினால் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த மே 9 கலவரம்

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள மே9 அறிக்கை | Sri Lanka Protest May 9

கடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த நாட்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசேட குழுவின் அறிக்கை செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாகவும், அதற்கமைய அதனை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களது ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட, முன்னாள் விமான படைத் தளபதி மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோரைக் கொண்ட குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையின்படி, படையினர் தரப்பில் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள மே9 அறிக்கை | Sri Lanka Protest May 9