கனடாவில் பெண்கள் தலைமுடியை வெட்டி போராட்டம்!

0
417

ஈரானில் பொலிஸ் வன்முறைக்கு பலியான இளம்பெண்ணிற்கு ஆதரவாக கனடாவிலும் பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஈரானில் பொலிஸ் தாக்குதலுக்கு பலியான Mahsa Amini பெயரில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அவரது பெயரை குறிப்பிட்டே ஈரானிய பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி வீசினர்.

ஓராண்டுக்கு முன்னர் ஈரானில் இருந்து கனடாவின் ஒட்டாவா பகுதிக்கு குடியேறிய Rezaeian தெரிவிக்கையில், ஈரானில் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் Mahsa Amini என்பவருக்காக மட்டுமல்ல ஈரானிய கொடுங்கோல் நிர்வாகத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் அனைத்து பெண்களுக்கானது என Rezaeian தெரிவித்துள்ளார்.

கனடாவில் தலைமுடியை வெட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் | Iranians Cut Hair Women Rights Rallies In Canada

மேலும், போராட்டக்களத்தில் உள்ள அனைத்து பெண்களும் தற்போது Mahsa Amini தான் எனவும் Rezaeian தெரிவித்துள்ளார். ஈரானில் ஹிஜாப் உடை சரிவர அணியாததன் பெயரில் கைது செய்யப்பட்ட Mahsa Amini கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்றாவது நாள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பற்றிக்கொள்ள தற்போது 80கும் மேற்பட்ட நகரங்களில் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும், தங்கள் ஹிஜாப் உடைகளை பொதுவெளியில் தீயிட்டு கொளுத்தியும் தலைமுடியை வெட்டி வீசியும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.